உக்ரெயின் வானூர்தி விபத்து - 5 பேர் பலி

Thursday, 14 February 2013 - 13:08

%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
உக்ரெயினில் இடம்பெற்ற வானூர்தி விபத்து ஒன்றில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
காற்பந்து ரசிகர்களை ஏற்றிச் சென்ற வானூர்தி ஒன்றே, அவசரமாக தரை இரக்க முயற்சித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
உக்ரேயினின் டொனெட்ஸ்க் பகுதியில் இந்த வானூர்தி விபத்துக்கு உள்ளான போது, அதில் 40க்கும் அதிகமானவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
வானூர்தி தரையிறக்கப்படும் போது ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, இதில் இருந்த பலர் வானூர்தியில் இருந்து வெளியில் குதித்ததால் உயிர்தப்பியுள்ளனர்.
 
சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.