மகளிர் உலக கிண்ணம்

Sunday, 17 February 2013 - 14:42

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+


மகளிர் உலக கிண்ணத்தின் இறுதி போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளின் மகளீர் கிரிக்கட் அணிகள் இந்த இறுதி போட்டியில் மோதுகின்றன.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்தடுத்து இரண்டு உலக கிண்ணங்களை பெற்ற நாடாக கணிக்கப்படும்.
இலங்கையில் இடம்பெற்ற 20க்கு20 உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே வெற்றிப் பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்றைய இறுதி போட்டியை தமது நாட்டு மக்களுக்காக வெற்றி பெற வேண்டும் என்று, மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கட் அணியின் தலைவர் மெரிசா அகிலெரியா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று உளரீதியாக நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.