இந்தியாவிற்கு பிரிட்டன் பிரதமர் பேச்சு

Sunday, 17 February 2013 - 20:15

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+



பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் குறித்து அவரிடம் தகவல் கேட்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா செல்லவுள்ள  பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், மும்பையில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

அன்று மாலையே டில்லி செல்லும் கேமரூன், பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாhர்.

இதனிடையே, இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய 3,600 கோடி ரூபா உலங்கு வானூர்தி ஊழல் விவகாரம் தீவிரமடைந்துள்ளது.

இதில் இந்தியா ஏற்கனவே கொள்வனவு செய்துள்ள உலங்கு வானூர்திகள் தென்மேற்கு பிரிட்டனைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட் லாண்ட நிறுவனத்தின் உலங்கு வானூர்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.