மஹேல நீக்கம், சமரவீர இணைப்பு

Tuesday, 19 February 2013 - 13:50

%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பங்களாதேஸ் அணியுடனான போட்டியில் இலங்கை அணியின் வீரர் மஹேல ஜயவர்த்தன விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரை இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
 
இதன் காரணமாக அவர் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், அவுஸ்ரேலிய அணியுடனான போட்டித் தொடரில் டெஸ்ட் அணியில் இணைக்கப்படாத திலான் சமரவீர பங்களாதேஸ் தொடருக்கான இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.