டெஸ்ட் போட்டி செயலற்று போகும்

Friday, 22 February 2013 - 18:50

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர், சர்வதேச ரீதியாக டெஸ்ட் கிரிக்கட் அழிந்துவிடும் என்று இலங்கை கிரக்கட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக டெஸ்ட் போட்டிகள் தற்போது வரவேற்பை இழந்து வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கட்களின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் புதிய கிரிக்கட் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை விட, ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போன்ற கிரிக்கட் போட்டிகளையே பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த நிலையில் சச்சின்டெண்டுல்கர் போன்றவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர், டெஸ்ட் கிரிக்கட் மெதுவாக மறைந்துவிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.