தரைக்கீழ் அணுசக்தி களஞ்சியங்களில் கசிவு

Saturday, 23 February 2013 - 19:54

%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81



அமெரிக்க - வாஷிங்டன் பகுதியில் உள்ள 6 தரைக்கீழ் அணுசக்தி களஞ்சியங்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயம் என்று வாஷிங்டன் மாநகர ஆளுனர் ஜேய் இன்ஸ்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்தபோதும், தற்போதைய நிலைமை மனிதநலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணுவாயுத உற்பத்திகளுக்கான புளுட்டோனிய தயாரிப்பின் பின்னர் வெளியிடப்படும் கதிரிக்க தொழிற்பாட்டு கழிவுகள் 200 க்கும் அதிகமான பாரிய கொள்கலன்களில் சேகரிக்கப்பட்டுள்ளன.
தரைக்கீழ் களஞ்சியத்தில் ஏற்பட்டுள்ள கசிவின் காரணமாக உடனடி தாக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், கொலம்பியா ஆற்றிக்கு 8 கிலோமீற்றர் தொலைவில் இந்த களஞ்சியம் அமைந்துள்ளதாகவும் ஆளுனர் ஜேய் இன்ஸ்லி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அணுக்களஞ்சிய கசிவு செய்தியானது வாஷிங்டன் வாசிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.