செல்வந்தர்கள் வரிசையில் கார்லோஸ் முதலிடம்

Tuesday, 05 March 2013 - 20:06

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

உலகப் பெரும் செல்வந்தர்களை அவர்களின் சொத்து பெறுமதியின் படி  பட்டியலிடும் ´போர்ப்ஸ்´ சஞ்சிகை இந்த ஆண்டின் செல்வந்தர்களுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஆயிரத்து 426 கோடீஸ்வரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த ஆண்டு இது 4.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இதன்படி உலகின் முதல் செல்வந்தராக மெக்சிகோவின் தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹ_லு பட்டியலிடப்பட்டுள்ளார்.

அவரது சொத்து மதிப்பு மாத்திரம் 73 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்க தொலைத் தொடர்புத் துறையையே தன் வசம் வைத்துள்ள அவர் சில்லறை வர்த்தகத்தில் முதல் நிலை நிறுவனத்துக்கு உரிமையாளர் மற்றும் பல தொழில்துறைகளையும் இயக்கி வருகிறார்.

கார்லோஸ் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாமிடத்தில் இருப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரான பில் கேட்ஸ் ஆவார்;.

அவரது இந்த வருடத்திற்கான சொத்து மதிப்பு 67 பில்லியன் டொலர்களாகும்.

பில் அண்ட் மலின்டா கேட்ஸ் நிதியத்திற்கு பல பில்லியன் டொலர்களை இவர் எழுதி வைத்த பின்னரும் அவர் தொடர்ந்து முன்னணியில் உள்ளார்.

உலகின் மூன்றாவது பெரும் செல்வந்தராக உலகளாவிய ரீதியாக உள்ள ஜரா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளரான அமான்சியோ ஒர்டேகா என்பவர் இடம்பிடித்துள்ளார்.

இவரது நிறுவனங்களின் முதலீட்டு மதிப்பு 84 பில்லியன் டொலர்களாகும்.

இவரது சொத்து மதிப்பு 57 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நெப்ராஸ்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் பெர்க்ஷையர் என்ற ஹதாவே நிறுவனத் தலைவர் இந்தியாவிலும் முதலீடுகளை ஆரம்பித்துள்ளார்.

அவரின் மொத்த சொத்து மதிப்பு 53.3 பில்லியன் டொலர்கள் என ´போர்ப்ஸ்´ சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் 5வது பெரும் செல்வந்தர் என்ற இடம் ஒரக்கள் நிறுவனத்தின் லாரி எல்லிசனுக்குக் கிடைத்துள்ளது.

இவரது சொத்து மதிப்பு 43 பில்லியன் டொலர்களாகும்.

இந்தப் பட்டியலின்படி, 21.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடைய சொத்துகளை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இந்திய செல்வந்தர்களில் முதல் இடத்தை தொடர்ந்து 6வது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் முதலிடம் என்றாலும் உலகின் பெரும் செல்வந்தர்கள் வரிசையில் முகேஷ{க்கு 22வது இடம் கிடைத்துள்ளது.