மூன்றாம் நாள் ஆட்டம்

Sunday, 10 March 2013 - 8:44

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

இலங்கை மற்றும் பஙகளாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தநிலையில், தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவு வரை 2 விக்கட்டுக்களை இழந்து 135 ஒட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து 570 ஒட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார 142 ஓட்டங்களையும், லஹிரு திரிமன்னே ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 116 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக சோஹாக் கசீ  3 விக்கட்டுகளை கைப்பற்றினார்