சுப்பிரமணியம் சுவாமி வலியுறுத்தல்

Tuesday, 12 March 2013 - 13:45

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+

 
அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை மூலம் யுத்தம் தொடர்பான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என வலியுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று இந்திய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
 
கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இதனை தெரிவித்துள்ளார்.

வாசிங்டனில் அமெரிக்காவிற்கான தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக்கை சந்தித்த போது இது குறித்து தம்மால் வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
 
தமது அமெரிக்க விஜயம் தொடர்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.