இரண்டாவது சர்வதேச விமான நிலையம்

Monday, 18 March 2013 - 20:15

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+


இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள விமான நிலையம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டடுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ஏ340 ரக விமானம் இன்று முற்பகல் 10.54 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் முதன் முதலாக தரை இறக்கப்பட்டது.
இதன் பின்னர் பிறிதொரு ஸ்ரீலங்கன் விமானமும், எயர் அரபியாவிற்கு சொந்தமான டி90508 ரக விமானம் ஒன்றும் தரை இறங்கியது.
உத்தியோகபூர்வமாக விமான நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, மகிந்த சிந்தனை குறித்த தாற்பரியத்தினை வெளிப்படுத்தினார்.
இது தவிர, இன்று தேசிய பொது விமான சேவை தினத்தை பிரகடனப் படுத்தினார்.
இதற்கு முன்னர் அரசாங்கத்தை நிர்வகித்தவர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவையை விற்க முற்பட்டதாக குற்றம்சாட்டினார்.
அதேவேளை, மத்தள விமான தளத்தை நிர்மாணப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சில முக்கிய உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக சிலரினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஜனாதிபதி மறுத்துள்ளார்.


[MP3]t55485[/MP3]


எதிர்காலத்தில் இலங்கையை ஆசியாவின் முக்கிய கேந்திர பிராந்தியமாக மத்தளவை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நாம் சுதந்திரம் பெற்றதன் பின்னர் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் எமது ஆளுமையை பயன்படுத்தியே இந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உலக வரைபடத்தில், புதிய விமான நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் வரலாறு படைத்துள்ளோம். முன்னர் பாரிய விமானங்களை இலங்கையில் இறக்கி அதனை பாதுகாக்கக்கூடிய தன்மையினை இலங்கை கொண்டிருக்கவில்லை என வெளிநாட்டவர்கள் தெரிவித்து வந்தனர். அந்த நிலை, இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நிலை மாறியுள்ளது. சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடி விட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர். அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. கட்டுநாயக்க விமான நிலையத்துடன் மேலும் விமான நிலையங்களை மேம்படுத்துவதே மகிந்த சிந்தனையின் கோட்பாடு.