ஜெனீவா பிரேரணை தொடர்பான கருத்து

Monday, 18 March 2013 - 20:25

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81


ஜெனீவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் காட்டும் பேரணி என்ற பிரதிபலிப்புகளை எதிர்காலத்தில் கைவிட்டு தமது பிழைகளை திருத்திக் கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர் கட்சி கூட்டணியினரின் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.
இலங்கையை வீழ்ச்சி போக்கில் செல்ல தாம் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் தொடர்பில், இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஒரு தரப்பினர் அதற்கு எதிரான கருத்தை வெளியிடுகின்றனர்.
எப்படியிருப்பினும், ஐக்கிய நாடுகள் சபைக்கு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு உரிமை உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன, அரசாங்கத்திற்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள் என அவர் குறிப்பிட்டார்.
சிலர் கேலிச்சித்திரங்களின் மூலம் எதிர்கட்சித் தலைவர் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளவுள்ளார் என்ற நிலைப்பாட்டை வெளிபடுத்தி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
வட்ட மேசை மாநாடு கூட்டப்பட்டால், மக்களின் மேம்பாட்டிற்காக நாம் செயல்பட்டு எமது கருத்துக்களை வெளியிடுவோம் எனவும் விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.