கச்சத்தீவு மீட்கப்படும்?

Wednesday, 27 March 2013 - 13:26

%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3F
தமிழக மீனவர்களுக்கு மீதான தாக்குதல்களுக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதற்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இதனைத் தெரிவித்துள்ளார். 

மீனவர் மீதான தாக்குதல் தொடர்பில் பல்வேறு ராஜதந்திர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இலங்கை அதனை மதிக்கவில்லை.

இந்த நிலையில் 1974ம் ஆண்டில் இலங்கைக்கு உரிமை மாற்றப்பட்ட கச்சத்தீவை மீளப் பெறுவதற்காக உயர் நீதிமன்றம் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கிழக்கு பாகிஸ்தான் வசமிருந்த 75 சதுரகிலோமீற்றர் பரப்பான பெருபாரி பிரதேசத்தை, மேற்கு வங்காளம் மீள பெற்றுக் கொண்டது போல, கச்சத்தீவ விடயத்திலும் செயற்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.