பர்வேஷ் முஷரபிற்கு தடையுத்தரவு

Tuesday, 09 April 2013 - 9:22

%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஷ் முஷரப் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது சுமத்திப்பட்டுள்ள தேசதுரோக வழக்கு தொடர்பில் நேற்று நீதிமன்றில் முன்னிலையானார்.

இதன்போதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

பாகிஸ்தான் ஜனாதிபதியாக கடந்த 2007ஆம் ஆண்டு முஷரப் இருந்த காலப்பகுதியில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். 

தலைமை நீதிபதி இப்திகார் சௌத்ரி உட்பட 12 நீதிபதிகளை முஷரப் பதவி நீக்கம் செய்தார்.

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார்.

இதனிடையே, எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 

அதில், தன் கட்சியை வழிநடத்திச் செல்வதற்காக, பர்வேஷ் முஷரப் அண்மையில் நாடு திரும்பினார்.

இந்த நிலையில், அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் போதே நீதிமன்றம் இந்த பணிப்புரையை விடுத்துள்ளது.