மாக்ரட் தச்சரின் இறுதி நிகழ்வுகள் அடுத்த வாரம்

Tuesday, 09 April 2013 - 19:47

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
நேற்று காலமான பிரிட்டிஷின் முன்னாள் பிரதமர் மாக்ரட் தச்சரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் என்று பிரதமரின் டவுனிங் ஸ்ரீட் செயலகம் அறிவித்துள்ளது.

87 வயதான மாக்ரட் தச்சர் நேற்று திடீரென சுகவீனமுற்ற நிலையில் மரணமானார்.

இவரது இறுதி நிகழ்வுகள் முழு பிரிட்டிஷ் ராணுவ மரியாதையுடன் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ரரில் இருந்து ஆரம்பமாகும் இறுதி ஊர்வலம் சென் போல்ஸ் கத்தரலில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இறுதிக் கிரியைகளில் பிரிட்டிஷ் மகாராணி மற்றும் எடின்பரோ கோமகனும் நேரடியாக சமூகமளிப்பார்கள் என்று பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.

மாக்ரட் தச்சருக்கு அரச மரியாதையுடனான இறுதிக் கிரியைகள் இடம்பெறாத போதிலும் இளவரசி டயானா மற்றும் மகாராணியின் தாயாருக்கு வழங்கப்பட்ட மரியாதை முறையிலான நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இறுதிக் கிரியைகள் தொடர்பாக இன்று காலை பிரதமர் செயலக அதிகாரிகளுக்கும் மாக்ரட் தச்சருக்கும் குடும்பத்தவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து நிகழ்ச்சி நிரல் தீர்மானிக்கப்பட்டதாக பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.