தென்கொரிய பாதுகாப்பு அதிகரிப்பு

Wednesday, 10 April 2013 - 19:51

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

 

வட கொரியா மேலும் ஒரு ஏவுகணை பரிசோதனையை மேற்கொள்ளவுள்ள நிலையில், தென் கொரிய அரசாங்கம் பாதுகாப்பு தன்மையினை மேலும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வு தகவலின்படி, வடகொரியா 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை பரிசோதிப்பதற்காக தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அமெரிக்க விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பரிசோதிக்கப்படும் இந்த வகை ஏவுகணை, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க நிலப்பரப்பினை சென்றடையக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகொரியாவினால் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை பரிசோதனை, எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியாங், நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள ஏவுகணைப் பரிசோதனை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் சட்ட வரைவு 1718 இற்கு அமைய தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறிதொரு தகவலின் படி ஏவுகணைப் பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வடகொரியாவின் ஸ்தாகரும், அண்மையில் காலஞ்சென்றவருமான கிம் இல் சுங்கின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.