மோதலில் பலர் உயிரிழப்பு

Tuesday, 23 April 2013 - 19:52

%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வட ஈராக்கிய சுன்னி அராபிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படை தரப்பினருக்கும் இடையே இடம் பெற்ற மோதல் சம்பவத்தில் குறைந்ததது 26 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்;.
சதாம் ஹ_சைன் பிறந்த இடமான கிர்குக்கிற்கு அண்மையில் இடம் பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை கலைக்க பாதுகாப்பு தரப்பினர் முயன்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கடந்த வருட இறுதி முதல் ஷியா முஸ்லிம் அரசாங்கத்திற்கு எதிராக சுன்னி முஸ்லிம் தரப்பினர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க படை தரப்பை சேர்ந்த பெரும்பான்மையான வெளிநாட்டு படைகள் வெளியேறிய நிலையில் மோதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதேவேளை, அரச உயர் இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் ஹவிஜா நகரத்தை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்ட நிலையில் வைத்துள்ளனர்.
அந்த கொலைக்கு காரணமானவர்களை இராணுவத்திடம் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் போராளிகளும் பொது மக்களும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஷியா மற்றும் சுண்ணி தரப்பினருக்கு இடையேயான முறுகல் நிலை மேலும் அதிகரித்த வண்ணம் இருப்பதாக பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.