ஆர்ப்பாட்டகார்கள் எச்சரிக்கை

Monday, 29 April 2013 - 8:40

%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
லிபியாவில் முன்னாள் ஜனாதிபதி மெஹமூர் கடாபி கடந்த 2011 ஆம் ஆண்டு புரட்சியின் முடிவில் படுகொலை செய்யப்பட்டார். 

அவர் மறைந்த பின் அமைந்த ஆட்சியில், கடாபியின் பதவிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்களே அனைத்து துறைகளிலும் உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இதற்காக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

இந்த நிலையில், நேற்று நவீன துப்பாக்கிகளுடன் சென்ற பொதுமக்கள் லிபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சக கட்டிடத்தை முற்றுகையிட்டனர். 

கடாபியின் ஆதரவாளர்களை பணி நீக்கம் செய்யாவிட்டால், ஏனைய அமைச்சக கட்டிடங்களையும் விரைவில் முற்றுகையிடுவோம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.