வெர்னன் மெனிலால்க்கு எட்டு ஆண்டு தடை

Wednesday, 01 May 2013 - 13:35

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88


இலங்கையின் காற்பந்து சம்மேளன தலைவர் வெர்னன் மெனிலால் பெர்ணான்டோவுக்கு எட்டு ஆண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காற்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவருக்கு சர்வதேச மற்றும் தேசிய ரீதியான எந்த காற்பந்து விளையாட்டுகளுடன் தொடர்புபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.