உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கலாம்

Sunday, 21 July 2013 - 14:04

%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+



தொடர்ச்சியாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பதன் காரணமாக இலங்கை நாணயம் வீழ்ச்சியடைவதன் மூலம் அத்தியாவசிய உணவுப்  பொருட்களின் விலை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதன் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களினை இறக்குமதி செய்யும் போது அதிக செலவீனம் ஏற்படுவதாக கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் பழனியாண்டி தெரிவித்துள்ளார்.
இறக்குமதிக்கான உறுதிப் பத்திரம் சில வாரங்களுக்கு முன்னர் வங்கியின் ஊடாக ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
எப்படியிருப்பினும், அவை இலங்கை வந்தடையும் போது மேலதிகமான செலவீனத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வெண்காயம், பருப்பு, சீனி, அரிசி, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், பால் வகைகள் என்பனவற்றிற்றின் விலைகள் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.