சுவேதா மேனனின் பிரசவ காட்சியை திரையிட மீண்டும் மறுப்பு

Tuesday, 06 August 2013 - 14:33

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81


 
நடிகை சுவேதா மேனன் படத்திற்கு திரையரங்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா மேனன், மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் குழந்தை பிறக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்துள்ளார்.
 
இயக்குனர் பிளஸ்சி படமாக்கிய தத்ரூப பிரசவ காட்சிக்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இதற்கு தணிக்கை குழு சம்மதம் தெரிவித்து யுஃஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
 
இதுபற்றி இயக்குனர் இயக்குனர் பிளஸ்சி கூறுகையில், பிரசவ காட்சி என்பது இப்படத்திற்கு முக்கியமான தேவை.
 
எனவே தான் சுவேதா மேனன் மற்றும் அவரது கணவரிடம் அனுமதி பெற்று நிஜ பிரசவ காட்சியை படமாக்கினேன்.
 
எந்த காட்சியையும் துண்டிக்காமல் தணிக்கை குழுவினர் சான்றிதழ் தந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இதற்கு கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த பிரசவ காட்சியை நீக்கிவிட்டு தான் திரையிடுவோம் என்று அறிவித்துள்ளது.
 
இதுபற்றி படக் குழுவினர் கூறுகையில், தணிக்கை குழுவை விட திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் அதிகாரம் வாய்ந்ததா? என்று கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.