உதயநிதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

Tuesday, 06 August 2013 - 14:38

%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D


 

தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின்.

தனது முதலாவது படத்திலே ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற இவர், தொடர்ந்து கதிர்வேலன் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
 
தன்னுடைய முதல் மற்றும் இரண்டு படங்களிலும் முன்னணி நாயகிகளுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் உதயநிதிக்கு மேலும் ஒரு ஹாட்ரிக் சந்தோஷம் கிடைத்துள்ளது.
 
இது கதிர்வேலன் காதல் படத்திற்கு பின்பு புதுமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கும் நண்பேண்டா படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறாராம்.
 
இப்படத்தில் உதயநிதிக்கு நண்பனாக நடிப்பது சந்தானம்தான். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.