Update : குர்சித் கவலை

Saturday, 16 November 2013 - 9:24

Update+%3A+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடமாகாணத்துக்கு விஜயம் செய்யும் முதலாவது வெளிநாட்டு பிரதமர் என்ற பெறுமையை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தவறவிட்டிருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளவில்லை.

எனினும் இதில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் மூலம் பல தசாப்பதங்களுக்கு பின்னர் வடக்குக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டு பிரதமர் என்ற பெறுமையை, டேவிட் கெமரூன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், வடக்கில் பல பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும், இந்தியா, இந்த பெறுமைய தவறவிட்டுள்ளமையானது, வருத்தமளிக்கின்ற விடயம் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update : Saturday, 16 November 2013 - 1:06 PM
-----------------------------------------------------------------
சல்மான் குர்சித்தின் விஜயம் ?

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, இந்திய பிரதமர் சல்மான் குர்சித் இலங்கை விஜயம் செய்துள்ளதன் பலன் என்ன என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையிலேயே சல்மான் குர்சித் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே இது சம்பந்தமாக இலங்கையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பிரதிபலன் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இது குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால், என்ன வகையான தீர்வு கிடைக்கப் போகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.