உலக சமூக ஊடக தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்ற விழாவில் விருதுகளைக் குவித்த ஹிரு

Tuesday, 30 June 2015 - 9:49

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81

உலக சமூக ஊடக தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அனைத்து முக்கிய விருதுகளையும் ஹிரு எப்.எம் மற்றும் ஹிரு டி.வி ஆகியன பெற்றுக்கொண்டன.


இதன்போது ஹிரு செய்தி, ஜனரஞ்சக செய்தி வழங்குனராக விருது பெற்ற அதேவேளை ஜனரஞ்சக வானொலியாக ஹிரு எப்.எம் உம் தொலைக்காட்சியாக ஹிரு டி.வியும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.

டிஜிடல் கலாச்சார, சமூக ஊடக மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான செய்தி வழங்கும் உலகின் விசாலமான இணையத்தளமான 'மேசபள்' மூலமாக  'சோஷல் மீடியா' தின நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் கொண்டாடப்படுகின்றது.

இம்முறை அந்நிகழ்வுக்கான பிரதான 5 இடங்களில் இலங்கையும் இடம்பெற்றிருந்தது. இதற்கான காரணம் பெரும்பாலான இலங்கையர்கள் சமூக ஊடகங்களை உபயோகிப்பதலாகும். எடிசலாட்டின் அனுசரனையுடன் நடைபெற்ற சமூக ஊடக தின நிகழ்வுகளின் பின்னர் பிரிவுகள் சிலவற்றின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருதுகள் அதிகம் விரும்பப்படும் சமூக ஊடகங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டன. இதில் பிரதான விருதுகளான ஜனரஞ்சக செய்தி வழங்குனர் , ஜனரஞ்சக வானொலி மற்றும் ஜனரக தொலைக்காட்சி ஆகிய விருதுகளை ஹிரு வென்றது. சமூக ஊடக விருது வழங்கும் நிகழ்வில் பெரும் ஆதரவினைப் பெற்று ஹிரு இவ்விருதுகளை வென்றிருந்தது.

இந்நாட்டின் பிரபல இணையத்தளங்கள் பலவற்றுக்குச் சொந்தக்காரரான ஆசிய ஊடக வலையமைப்பின் ,கீழ் இயங்கும் லோடஸ் டெக்னோலஜி நடத்தி வரும் ஹிரு செய்தி இணையத்தளம் உட்பட ஆசிய ஊடக வலையமைப்பின் இணையத்தளங்கள் இலட்சக் கணக்கானோர் நிரந்தரமாக பாவிக்கும் தளமென்பது மீண்டும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

ஹிரு டி.வி மற்றும் ஹிரு எப்.எம் ஆகிய விருதுகளுக்கு பின்னால் இருந்து வழிநடத்துபவர் ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோர் சில்வா ஆகும். அவரின் எண்ணக்கருவில் ஆரம்பமான ஹிரு டி.வி மற்றும் ஹிரு எப்.எம் ஆகியன அவரின் வழிகாட்டலின் ஊடாக தற்போது இலங்கை ஊடக கலாச்சாரமானது புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.

இலங்கையின் ஊடக கலாசாரத்தை புதிய பாதையில் இட்டுச் செல்வது தொடர்பான தனது சிந்தனையை இலங்கை மக்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருவதாக ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோர் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியின் ஹிரு செய்திகள் , ஹிரு எப். எம் மற்றும் ஹிரு டி.விக்கு வழங்கப்படும் இவ்வாறான விருதுகள் நிச்சயமாக உற்சாகமூட்டக்கூடியதாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.