ஸ்லிம் நீல்சன் விருதுகள் ஹிருவிற்கு...

Sunday, 27 March 2016 - 8:12

+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
ஸ்லிம் நீல்சன் மக்கள் விருது வழங்கும் நிகழ்வில் அனைத்து விருதுகளையும் வென்று, மீண்டும் மக்கள் மத்தியில் அதி சிறந்த ஊடகங்களாக எமது சகோதர ஊடகங்களான ஹிரு எப் எம் மற்றும் ஹிரு டீ.வி என்பன தெரிவாகியுள்ளன.

முக்கியஸ்தர்கள் பலரின் பங்குபற்றலுடன் இந்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில்  ஹிரு எப்.எம் மற்றும் ஹிரு டி.வி என்பன இலங்கையின் அதி சிறந்த வானொலி மற்றும் தொலைகாட்சி என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இலங்கையின் அதி சிறந்த வானொலிக்கான மக்கள் விருது ஹிரு எம்.எம்.இற்கு வழங்கப்பட்டது.

அத்துடன் வருடத்தின் சிறந்த தொலைகாட்சிக்கான விருது ஹிரு.டி.விக்கு வழங்கப்பட்டது.

மக்களின் சிறந்த செய்தி ஊடகமாகவும் ஹிரு டீ.வி. விருதினை வென்றது.

அதி சிறந்த இளைஞர் தொலைகாட்சியாகவும் ஹிரு டி.வி மக்கள் விருதினை வென்றிருந்தமை விசேட அம்சமாகும்.

அதேநேரம் அதி சிறந்த இளைஞர் வானொலிக்கான விருதும் ஹிரு எப்.எம்.இற்கு வழங்கப்பட்டது.

மேலும் பல விருதுகளையும் ஹிரு எப் எம் மற்றும் ஹிரு டீ.வி என்பன வென்றுள்ளன.