தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் ஜே.வி.பி யின் முன்னாள் தலைவர் சேமவங்ச அமரசிங்கவிற்கு இடையிலான வழக்கு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டுள்ளது.
விமல் வீரவங்சவினால் எழுதப்பட்ட 'இன்மைக்கு பதிலாக உண்மை' எனப்படும் நூலை ஜே.வி.பியின் அனுமதியின்றி வெளியிட்டதாக தெரிவித்து சோமவங்ச அமரசிங்க வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில காலமாக இடம்பெற்று வந்த நிலையில், குறித்த நூலின் பதிப்பு மற்றும் விநியோகத்தை நிறுத்துமாறு சோமவங்ச அமரசிங்க கோரியிருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈட்டையும் அவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், குறித்த வழக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரு தரப்பினருக்கும் நிபந்தனை அடிப்படையில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.