இரு வேறு இடங்களில் வாகன விபத்துக்கள் - 5 பேர் பலி

Thursday, 07 April 2016 - 8:13

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கெகிராவை மற்றும் தம்புள்ளை பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெகிராவை – கல்நேவ – சேனபுர பிரதேசத்தில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டதில் 3 பேர் பலியானார்கள்.

உந்துருளியில் பயணித்த மூன்று பேரில் இரண்டு பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படு காயமடைந்த நிலையில் சேனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அவரும் உயிரழந்துள்ளார்.

குறித்த மூன்று பேரும் கெகிராவை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன் 43 , 32 மற்றும் 27 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, தம்புள்ளை ஹபரன பிரதான வீதி கிரிவடுவத்த பிரதேசத்தில்  ஜீப் ரக வாகனம் ஒன்று மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

35 மற்றும் 42 வயதுடைய கிரிவடுவத்த பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் ரக வாகனத்தில் பயணித்த இரண்டு  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் திருக்கோணமலை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது.