எல்லை நிர்ணய பிரச்சினையற்ற உள்ளுராட்சி மன்றங்களை, வர்த்தமானி மூலம் பெயரிட்டு அவற்றிற்கு உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சிடம் கடிதம் மூலம் இதனைக் கோரியுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் அமைக்கப்பட்ட குழு, தமது கடமையை உரிய முறையில் மேற்கொண்டிருந்தால் இத்தகைய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.