புகையிரத சேவை அட்டவணை பழைய நேரத்திற்கே மாற்றம்

Thursday, 07 April 2016 - 9:27

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
நாளை முதல் சில புகையிரத சேவைகள் தவிர ஏனைய புகையிரத சேவைகள் அனைத்தும் பழைய நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபடுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் புதிய புகையிரத சேவைக்கான நேர அட்டவனை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்போது பல புகையிரத சேவைகளின் புறப்படும் நேரங்கள்  மாற்றப்பட்டன.

இது தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னரே பழைய நேர அட்டவணையை நடைமுறைப்படுத்த தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் புகையிரத பாதையின் சீதுவ மற்றும் கட்டுநாயக்க நிலையங்களுக்கு இடையில் பாலம் ஒன்றை அமைக்கும் நோக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் 6 மணிவரை புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்.

இந்த காலப்பகுதியில் புகையிரத சேவையிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும் அதேவேளை, சில சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.