பொன்சேகா சமயத்தலைவர்களுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார் -விஜயதாச

Thursday, 07 April 2016 - 9:41

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A
அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை சாதமாக பயன்படுத்திக் கொண்டு சமய தலைவர்களுக்கு அவதூறை ஏற்படுத்துவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்து சபாநாயகரிடம் மனுவொன்றை கையளித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் காரணமாக துறைசார் அமைச்சர் என்றவகையில் தமக்கும், அரசாங்கத்திற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, இரண்டு பௌத்த குருமார்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பின்தொடர்ந்து சென்று உபவேந்தர் பதவிகளை பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

பெல்லன்வில மற்றும் களனி விகாரைகளைச் சேர்ந்த பௌத்த குருமாரே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.