தற்கொலை அங்கிகள் 313 கண்டுபிடிப்பு...

Thursday, 07 April 2016 - 11:23

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+313+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
யுத்தத்தின் பின்னர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு பிரதேசங்களில் தற்கொலை அங்கிகள் 313 ஐ இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக நிதி இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ரவைகள் 46 லட்சத்து 21 ஆயிரத்து 360, சைனட் குப்பிகள் 73, வெடி பொருட்கள் 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ கிராம் மற்றும் ஆயுதங்கள் 8 ஆயிரத்து 531 உம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.