எம்பிலிபிட்டிய விருந்துபசாரத்தின் போது, காவற்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் பலியான சுமித் பிரசன்ன என்ற இளைஞரின் மரணம் தொடர்பில் 12 காவற்துறையினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எம்பிலிபிட்டிய காவற்துறையில் சேவையாற்றிய 12 பேருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால செயற்பாடு தொடர்பில் இன்றைய தினம் கூடவுள்ள காவற்துறை ஆணைக்குழுவில் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டி – மஹஎல பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் சுமித் பிரசன்ன என்ற இளைஞர் பலியானமை நினைவூட்டத்தக்கது.