உள்ளுராட்சி தேர்தல் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசின் கடன் தொடர்பாக கருத்து

Thursday, 07 April 2016 - 12:54

%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது பெற்றுகொண்ட கடன் தொடர்பாகவும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு இரண்டின் போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க செயற்பட்டவர்கள் ஜனாதிபதி உட்பட சுதந்திர கட்சியில் உள்ள அரசாங்க குழுவொன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த முன்னணியின் ஊடக பேச்சாளர், மொகமட் முஸாமில் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஆட்சியின் கடன் சுமையால் தற்போது நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளதாக அமைச்சர் மத்துமு பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமயைகம் ஸ்ரீகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.