மின்னல் தாக்குதலுக்கு இலக்கான இருவர் காயமடைந்துள்ளனர்

Tuesday, 31 May 2016 - 20:18

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தொடர்ந்தும் கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளதால்  அதனை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், களுகங்கையின் நீர்மட்டம் சிறிதளவில் குறைவடைந்துள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதே வேளை , இரத்தினபுரி , கண்டி , கேகாலை , நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை நாளை பிற்பகல் இரண்டு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , இன்று இரவு நாட்டின் அனேக பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  , தேயிலை கன்றுகளை நாட்டிக்கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

மஸ்கெலியா சாமிமலை மீறியகோட்டை தோட்டத்தில் இன்று முற்பகல்  11 மணியளவில் இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பெயார்லோன் தோட்டத்தை சேர்ந்த 25 மற்றும் 55 வயதுடைய ஆண் தொழிலாளர்களே மின்னல் பாதிப்புக்கு உள்ளாகினர்



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips