இம் முறை முக்கிய விருதுகளை தனதாக்கியது ஹிரு.. படங்கள்..

Sunday, 17 July 2016 - 12:46

%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81..+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
உலக சமூக ஊடகவியலாளர் தினத்திற்கமைய இலங்கையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் முக்கிய விருதுகளை ஹிரு தனதாக்கியது.

உலக சமூக ஊடகவியல் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் அனைத்து முக்கிய விருதுகளை ஹிரு எப் .எம் மற்றும் ஹிரு டீ . வி தனதாக்கியது.

இதற்கமைய,  மிகவும் பிரபலமான செய்தி வழங்குநர், பிரபல வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவை போன்ற விருதுகளை ஹிரு எப்.எம், ஹிரு டீ.வி தனதாக்கியது.

நேற்று கொழும்பில் எடிசலாட் நிறுவனத்தினால்  இந்த விருது வழங்கும் விழா முன்னெடுக்கப்பட்டது.

ஹிரு ஊடகம் அதிகமான மக்களை ஈர்த்துள்ள ஒரு ஊடகமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஹிரு  இணையத்தளத்தின் ஊடாகவும் அதிகமான மக்களை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த வெற்றிகளின் பின்னால் ஆசிய ஊடகவலையமைப்பின் தலைவர் ரேனு சில்வாவே காரணம்  என்றால் அது மிகையாகாது.


மிகவும் பிரபலமான செய்தி வழங்குநர் விருது..


பிரபல தொலைக்காட்சி சேவை விருது ஹிரு டீ .வி..

பிரபல வானொலி சேவை விருது ஹிரு எப்.எம்..