தொடர்ந்து நான்காவது தடவையாகவும் ஸ்லிம் நீல்சன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள ஹிரு...

Saturday, 11 March 2017 - 7:05

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81...
2017 ஆம் ஆண்டுக்கான ஸ்லிம் நீல்சன் விருதுகளில் இலத்திரனியல் ஊடகங்களுக்கான விருதுகளை தொடர்ந்து நான்காவது தடவையாகவும் வென்று மக்களின் முன்னணி ஊடங்களாக சூரியனின் சகோதர ஊடகங்களான ஹிரு எப். எம். மற்றும் ஹிரு டி.வி. ஆகியன மீண்டும் நிரூபித்துள்ளன.
 
ஸ்லிம் நீல்சன் விருது வழங்கும் விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது ஹிரு எப். எம். மற்றும் ஹிரு டி.வி. வென்றுள்ள விருதுகளின் விபரம் பின்வருமாறு..
 
வருடத்தின் சிறந்த தொலைக்காட்சி விருதை ஹிரு தொலைக்காட்சி வென்றுள்ளது.
 
வருடத்தின் சிறந்த வானொலி விருதை ஹிரு எப். எம். வென்றுள்ளது.
 
சிறந்த செய்தி வழங்குநர் விருதை ஹிரு தொலைக்காட்சி வென்றுள்ளது.
 
வருடத்தின் சிறந்த இளைஞர் தொலைக்காட்சி விருதை ஹிரு தொலைக்காட்சி வென்றுள்ளது.
 
வருடத்தின் சிறந்த இளைஞர் வானொலியாக ஹிரு எப். எம். வானொலி வென்றுள்ளது.