பணிப்புறக்கணிப்பு தொடர்பில் மருத்துவர்களின் இறுதி தீர்மானம்

Tuesday, 30 January 2018 - 13:41

%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதன் காரணமாக இன்று காலை தொடக்கம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நிறைவு செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இன்று காலை 8 மணி முதல் ஒருநாள் அடையாளப்பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செவிசாய்க்காததன் காரணத்தினாலேயே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாக சங்கத்தின் செயலாளர் ஹரித் அளுத்கே  குறிப்பிட்டிருந்தார்.