ஶ்ரீலங்கன் விமான சேவையில் நிலவிய போக்குவரத்து தாமதம் தொடர்ந்தும்..!

Tuesday, 27 February 2018 - 8:41

%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%21
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்களின் சேவைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

எவ்வாறாயினும் , இந்த நிலைமை அநேகமாக கட்டுப்படுத்த கூடியதாய் இருக்கும் என விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

கொச்சினில் பறவை ஒன்று விமானத்தில் மோதியமை உள்ளிட்ட காரணங்களால், இரண்டு விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறினால் இந்தநிலை உருவாகி இருக்கிறது.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விமானப் பயணத்துக்காக பதிவு செய்துள்ளவர்கள், முன்கூட்டியே தங்களைத் தொடர்பு கொண்டு சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கன் விமானசேவை அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக 01 973 319 79 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.