சிரிய படையின் அட்டூழியத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நாவின் கோரிக்கை நீடிப்பு

Tuesday, 27 February 2018 - 8:45

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கோட்டாவில், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நீடித்துள்ளது.

விமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை இந்த கோரிக்கையை நீட்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.

எனினும் சிரிய அரசாங்கத்தினால் இது இன்றுவரையில் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில், கடந்த எட்டு தினங்களில் மாத்திரம், சிரிய அரச படைகளில் வான் தாக்குதலால் சுமார் 541 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.