காசல்ட்றீ நீர்த்தேக்கத்தில் நீந்திய காட்டு சேவல் – அரிய காணொளி

Monday, 03 December 2018 - 11:08

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E2%80%93+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
காசல்ட்றீ நீர்த்தேக்க வனப்பகுதியில் வாழும் காட்டு சேவல் ஒன்று காகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக காசல்ட்றீ நீர்த்தேக்கத்தின் ஊடாக நீந்தி சென்றுள்ள அரிய காட்சியை எமது செய்தியாளர் தனது கெமராவில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

காசல்ட்றீ நீர்த்தேக்க வனப்பகுதியில் அதிகளவான காட்டு சேவல்கள் வசிப்பதோடு, நீர்தேக்கத்தை சுழவுள்ள பகுதிகளில் உலாவும் காகங்களினால் அவை தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு சேவல்கள் பறக்கும் வேளைகளில் காகங்கள் பறந்து சென்று அவற்றை தாக்குவதால், அந்த காட்டு சேவல்கள் நீர்த்தேக்கம் ஊடாக நீந்தி சென்று பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதாக நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.