கால்வாயில் விழுந்த யானை பல மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்பு - படங்கள்

Saturday, 08 December 2018 - 15:30

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் உள்ள இசட் - டி கால்வாயில் விழுந்த யானையை அதிலிருந்து மீட்டு அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியுள்ளனர்.

இன்று அதிகாலை 6.00 மணியளவில் கால்வாயில் விழுந்துள்ள குறித்த யானையை வெலிகந்த வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து 6 மணி நேரம் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சுமார் 25 வயதான இந்த யானை குறித்த கால்வாயில் நீரை அருந்த முயற்சித்த வேளை அதில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.