49 பேரை கொலை செய்த நபருக்கு ஒரே ஒரு கொலைக் குற்றச்சாட்டா..?

Saturday, 16 March 2019 - 7:45

+49+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE..%3F
நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூட்டில் 49 பேரை கொலை செய்த தீவிரவாதி, ஒரேஒரு கொலைக் குற்றச்சாட்டு தொடர்பிலேயே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அவர் மீதான ஏனைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 28 வயதுடைய ப்ரென்டொன் ரரண்ட் என்ற அவுஸ்திரேலியரான அவர் நேற்றைய தினம் நியூஸிலாந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் எதிர்வரும் 5ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், குறித்த துப்பாக்கித் தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டடு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் மீது குற்றவியல் பதிவுகள் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
க்ரைஸ்ச்சர்ச்சில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட முதலாவது நபர் தவுத் நபி  என்ற 76 வயது உடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கடந்த 1980ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்ட ஏனைய 48 பேர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை

இந்த நிலையில், குறித்த துப்பாக்கிச்சூட்டில் தமது நாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்தின் க்ரைஸ்ச்சர்ச்சில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு 49 பேரை கொலை செய்த துப்பாக்கிதாரி 5 துப்பாக்கிகளையும், துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளவர் என அந்நாட்டு பிரதமர் ஜசின்டா ஆர்டேன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமது நாட்டின் துப்பாக்கிச் சட்டங்களில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.