கடல் அலை 3.5 மீற்றர் அளவில் உயரலாம்......

Saturday, 20 July 2019 - 16:23

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88++3.5+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D......
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி ,மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை  ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே 70 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே அந்த கடல்பகுதிகள் இடைக்கிடையே கடும் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கடற்பகுதியுனுள் நாளை காலை வரை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் கடற்படை சமூகமும் இத தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோர கடற்பகுதிகளில் கடல் அலை 2.5 முதல் 3.5  மீற்றர் அளவில் உயரக்கூடும் நிலமை காணப்படுவதுடன், இதனால் கடல் அலைகள் நிலப்பரப்பை நோக்கி வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையில் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலவாக்கலை பேர்ஹம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மரம் முறிவு காரணமாக 9 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 23 சிறார்கள் அடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பேர்ஹேம் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கினிகத்ஹேன நகரில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் 22 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகக் கூடும் என அம்பகமுவ பிரதேச சபை எச்சரித்துள்ளது.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தமக்கு அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மற்றும் மண்சரிவு பாதிப்புக்கு உள்ளாகவுள்ள வர்த்தக நிலைய நிர்மாண பணிகளுக்கான அனுமதி அம்பகமுவ பிரதேச சபையால் பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் அங்கிருந்து வெளியேறாவிட்டால் அவர்களது வர்த்தக அனுமதி பத்திரங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா தெரிவித்துள்ளார்.


பொதுத்தேர்தல் தொடர்பில் வெளியான பல்வேறு கருத்துக்கள்
Sunday, 05 July 2020 - 19:26

பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் இருப்பை... Read More

வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
Sunday, 05 July 2020 - 19:17

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்... Read More

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள குசல் மென்டிஸ் (காணொளி)
Sunday, 05 July 2020 - 19:30

இன்று இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட... Read More