மனிதன் சந்திரனில் கால்த்தடம் பதித்து 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மக்கள்

Sunday, 21 July 2019 - 8:02

%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+50+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மனிதன் சந்திரனில் கால்த்தடம் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து அமெரிக்காவில் பெருமளவானோர் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

1969ஆம் ஆண்டு ஜுலை மாதம் 20 ஆம் திகதி எப்பலோ - 11 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.

இதன்போது, நீல் ஆம்ஸ்ட்ரோங் முதன் முதலாக சந்திரனில் கால்த்தடம் பதித்தார்.

அவரைத் தொடர்ந்து புஸ் எல்ட்ரின் இரண்டாவதாக காலத்தடம் பதித்தார்.

இதேநேரம், நீல் ஆம்ஸ்ட்ரோங்வுடன் சென்ற குழுவில் மைக்கல் கொல்லின் என்பவரும் இருந்துள்ளார்.

குறித்த மூன்று பேரும் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர்களாவர்.

சந்திரனில் முதன் முதலாக கால்த்தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ரோங், கடந்த 2012 ஆம் ஆண்டு தனது 82 ஆவது வயதில் காலமானார்.

எல்ட்ரின் மற்றும் கொல்லின்ஸ் ஆகியோர் சந்திரனில் தரையிறங்கியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், தாங்கள் சந்திரனில் தரையிறங்கியபோது, 250 மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் பின்னால் இருந்தனர் என்றும், இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி நிகழ்வது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நாளை மீண்டும் திறக்கப்படவுள்ள தாஜ்மஹால்
Sunday, 05 July 2020 - 15:31

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக... Read More

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் தொடர்பில் வெளியான தகவல்
Sunday, 05 July 2020 - 15:12

ஜீ-4 என அழைக்கப்படும் புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் புதிய... Read More

கொண்டாட்டங்களில் ஈடுப்பட தயார்..!
Sunday, 05 July 2020 - 8:48

கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் ஐக்கிய அமெரிக்கா... Read More