துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி

Sunday, 21 July 2019 - 10:57

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ரத்கம - தெல்கட வீதியில் வடுமடுவ சந்தியில் உந்துருளியில் பயணித்த ஒருவர் மீது மேலும் ஒரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, பின்னர் பிரதேசவாசிகள் இது தொடர்பில் காவல்துறை அவசர தொலைபேசி இலகத்திற்கு அழைத்து தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த நபரை மீட்டு காலி – கராபிட்டிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் ரத்கம - ரூபிவெல வேவதெனிய பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ரத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.