மூடிய அறை கலந்துரையாடல்...

Friday, 16 August 2019 - 7:55

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D...
இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மூடிய அறை கலந்துரையாடல் ஒன்றை இன்று நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் கோரிக்கைக்கு அமைவாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
 
 இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் பங்கேற்பு இடம்பெறாது என்று கூறப்படுகிறது.

மேலும் அங்கு கலந்துரையாடப்படும் விடயங்கள் அனைத்தும் இரகசியமாகவே பேணப்படும்.
 
ஜம்மு - காஷ்மீருக்கு இந்திய அரசியல்யாப்பில் வழங்கப்பட்டிருந்த விசேட அந்தஸ்த்தை ரத்துசெய்ய அந்த நாட்டின் நாடாளுமன்றம் தீர்மானித்திருந்தது.
 
இதனை அடுத்து இதுகுறித்த விவாதத்தை நடத்துமாறு பாகிஸ்தானும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.