போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு

Friday, 16 August 2019 - 10:45

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஹிருரக்கொட - ரஜஎல பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது போலி ஆவணங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிருரக்கொட  பிரதேசத்தினை சேர்ந்த 51 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை சான்றிதழ்கள், நீதிமன்ற கடிதங்கள், இடம் தொடர்பிலான ஆவணங்கள், மருத்துவ சான்றிதழ்கள், பரீட்சை பெறுபேறுகள் மற்றும் கிராம் உத்தியோகத்தரின் சான்றிதழ்கள் இவ்வாறு போலியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.