அமைதிப் பேச்சுவார்த்தையை நிராகரித்த வடகொரியா

Friday, 16 August 2019 - 13:48

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4++%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
தென்கொரியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான யோசனையை வடகொரியா நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா மேற்கொண்ட தவறுகளால் இனி அதனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில்லை என்று திட்டவட்டமாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மேலும் இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் குறித்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக, தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்துக்கும் குறைந்த காலப்பகுதியில் வடகொரியா மேற்கொள்ளும் ஆறாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.