நாடு கடத்தப்பட்ட 13 பேர்..

Friday, 16 August 2019 - 11:23

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+13+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 13 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

13 பேரும் ஆண்கள் என்பதுடன் படகு மூலம் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த நபர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலணாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.