வயல் வெளியில் அவசரமாக தரையிறங்கிய ரஷ்ய விமானம்..! காரணம் என்ன?

Friday, 16 August 2019 - 11:37

%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F
ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து ‘யூரல் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சுமார் 233 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது. குறித்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, பறவைகள் கூட்டம்கூட்டமாக வந்துள்ளன.

பறவை கூட்டத்தை சமாளித்து கடந்து கொண்டிருக்கையில், ஒரு சில பறவைகள் விமானத்தின் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டது. இதனால், இயந்திரத்தில் பறவை சிக்கி விமானத்தை தடுமாறச் செய்தது. இதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட விமானி, உடனே அவசர அவசரமாக அருகில் உள்ள விமான நிலையத்தை தொடர்பு கொண்டார். 

இருப்பினும், விமானத்தின் நிலை மோசமானதன் காரணமாக, பாதுகாப்பு கருதி அப்படியே தரையிறக்கம் செய்யப்பட்டது. நல்ல வேளையாக விமானம் தரையிறங்கும் பகுதியில் கட்டிடங்கள், குடியிருப்புகள் எதுவும் இல்லாமல், மக்காச் சோளம் வயல் வெளியாக இருந்தது. இதனால் விமானம் நேராக வயல்வெளிப் பகுதியில் தரையிறக்கப்பட்டது. 

பின்பு விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. விமானியின் சாதூர்யத்தால் விமானத்துக்கும் பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் தீ விபத்து எண்மர் பலி
Thursday, 06 August 2020 - 10:31

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் பகுதியில் அமைந்துள்ள... Read More

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 75ஆம் ஆண்டு நினைவு தினம்
Thursday, 06 August 2020 - 9:22

இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின்... Read More

டுபாயில் தீப்பரவல் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Thursday, 06 August 2020 - 8:51

டுபாய் அஜ்மன் சந்தை தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல்... Read More