வர்த்தகர் கொலை - சந்தேக நபர் ஒருவர் கைது

Friday, 16 August 2019 - 13:51

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
புத்தளம் பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒர்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த 11ம் திகதி முதல் குறித்த வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக, அவரது உறவினர்களால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட வர்த்தகரது கைப்பேசி உரையாடல் மற்றும் சீ.சீ.டி.ரீ பதிவுகளின் அடிப்படையில்குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட வர்த்தகரால் குறித்த சந்தேக நபருக்கு 5 லட்சம் ரூபாய் பணம் வட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு பகுதியை திருப்பி செலுத்திய சந்தேகபர் எஞ்சிய தொகையை செலுத்தாத நிலையில், கடந்த 11ம் திகதி அந்த பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வர்த்தகர் சந்தேகநபரின் இல்லத்துக்கு சென்றிருந்த போது கொலையுண்டதாக தெரியவந்துள்ளது.